Sunday, September 2, 2012

புதிதாக லேப்டாப் வாங்கவிருப்பவர்களுக்கு சில டிப்ஸ்!

Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும்.


அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும்.


ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும்.


இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம்.


லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்.


சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.

SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER



சரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.


Laptop Configuration

PROCESSOR

Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதாகும்.


எனவே நீங்கள் விலை கூடுதலான ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor

Intel Core i7
Intel Core i5
Intel Core i3



என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த மூன்று வகையான Core வரிசையில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடுதல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.


இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றைய நவீன டெக்னாலஜிக்கு பொருத்தமானதாக இருக்காது.


Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண்பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்பதை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாடலை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்குமேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்கவேண்டியது அவசியம்.



RAM

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும்பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது.


அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிராம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தால் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக்னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளுங்கள். ( பொதுவாக விலை குறைந்த லேப்டாப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAM மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.


HARD DISK

அடுத்தாக நீங்கள் கவனிக்கவேண்டியது இந்த ஹார்ட் டிஸ்க். பொதுவாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதிகம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்படும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொருத்துதான் உள்ளது என தவறாக என்னுகிறார்கள். கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை.


ஆனால் இன்றைய மென்பொருள்களின் அதி வேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவிலும் கொஞ்சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.



நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென்பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடியோ பைல்களை உங்கள் லேப்டாப்பில் காப்பி செய்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அளவு குறைந்தது 320 GB இருக்கவெண்டும்.


ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என்றால் 160 GB போதுமானது.

எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோசாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படுத்துவேன் அடுத்ததாக நான் இண்டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்களுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம்.


பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்கவேண்டிய இன்னொரு விசயம் அதன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM SPEED போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தால் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெடுங்கள்.


DVD DRIVE

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும்பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புகளில் அதற்கு பொருத்தமான தரமிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள்.


GRAPHIC CARD

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைகளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப்பட்டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும்.

சரி இந்த கிராபிக் கார்டு இணைந்திருப்பதால் நமக்கு என்ன பயன் ?


நீங்கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட்டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுடைய லேப்டாப்பில் கிராபிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) படங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்கவேண்டும் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்கள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங்குவது சிறந்தது.


இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப்டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசியம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொருத்தப்படுகிறது.


இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.


இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந்தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedicated Graphic Cardகொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.


ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட்டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது.


அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந்துள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.


போட்டோசாப், கோரல்ட்ரா மற்றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட்வேர்கள் பயன்படுத்துபவராக இருந்தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினால் போதும்.


Operating System ( OS)


விலை அதிகம் உள்ள லேப்டாப் வாங்க நினைக்கும் நீங்கள் இந்த ஆபரேடிங் சிஸ்டத்தில் கவனக்குறைவாக இருந்துவிடாதீர்கள்.  ஏனென்றால் எல்லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப்டாப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவிடும்.


இப்பொழுதெல்லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Winsows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.



Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version



இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு.


இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப்பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்கலாம். இருப்பினும் இதற்கு அடுத்ததாக மிக சிறப்பாக செயல்படக்கூடிய Windows 7 Home Premium வெரிசனையாவது நாம் வாங்குவது மிக சிறந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடுங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயனடுத்துவதற்கு மிக சிறந்தது.


Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண்டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்புடன் பயன்படுத்த முடியாது.


அடுத்ததாக புதிய வகை லேப்டாப்புகளில் மைக் வெப் கேம் அனைத்தும் இணைந்தேதான் வருகிறது.இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக்கொள்ளுங்கள்.


நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.V யில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக்கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக்கொள்ளுங்கள்.


இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப்டாப் பேக் கிடைக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.

கணனி என்றால் என்ன...? What is a Computer ...?

கணனி என்பது பல எலொக்ரொனிக் இளைகளினால் ஆன transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால் பல உறப்புகளை ஒன்றினைத்து உருவாக்கப் பெற்ற ஓர் எலெக்ரொனிக் இயந்திரம்.

ஒபறேற்ரிங் சிஸ்ரம் என்னும் புறோகிறாம் மூலம் இயங்கச் செய்து, அதன் மூலம் ஒரு வேலையை துல்லியமாகவும், வேகமாகவும், தன்னிச்சையாக செயல்பட்டு செய்விக்க கூடியதாக உருவாக்கப் பெற்ற ஒரு கருவியே கணனி என அழைக்கப்பெறுகின்றது.


கணனியின் முழுச் செயற்பாட்டிற்கும் அதில் உட்புகுத்தப் பெற்றுள்ள ஒபறேற்ரிங் சிஸ்ரமே அடித்தளமாகவும், உந்துசக்தியாகவும் அமைந்து, எல்லா உறுப்புகளையும் ஒன்றாக இணைத்து இயக்குகின்றது.


அது Application Software ன் பாவனையின் போது அதனுடன் இணைந்து அது இயங்கும் மேடையாக அமைந்து தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து, அவ்வப்போது அவற்றில் முன்கூட்டியே பதியப்பெற்றுள்ள உபதேசங்களிற்கு அமைய கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் CPU க்கு வழங்குவது ஒபறேற்ரிங் சிஸ்ரமே.



கணினிகளின் வகைகள்:

எல்லோருடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் வகையில் பலவித அளவுகளில் கணனிகள் உருவாக்கப்பெற்று, அவைகள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப் பெற்றுள்ளன.


அவையாவன:

1. Personal -Computers:
 
Desktop – Pc
Tower – Pc
Laptop – Pc
Hand held – Pc
Network – Pc
PC – Personal Computer
– பிரத்தியேக கணனி என பொருள்படும்.

2. Mini – Computers:

இது ஒரு டிபாட்மென்ரில் பாவிப்பது. இதன் மூலம் நூற்றுக் கணக்கான கணனிகளை ஒன்றிணைது ஒன்றிற் கொன்று தொடர்புடன் ஒரே நேரத்தில் இயக்கமுடியும்.

3. Mainfram – Computers:

பெரிய நிறுவனங்களில் பாவிப்பது. இதன் மூலம் பல ஆயிரம் கணனிகளை ஒன்றிணைது ஒன்றிற் கொன்று தொடர்புடன் ஒரே நேரத்தில் இயக்கமுடியும்.


4. Super – Computers:

நாசா போன்ற பெரிய ஆராச்சி நிலையங்களில் பாவிப்பது. வேகத்தில் கூடியதும், மில்லியன் கணக்கான வேலைகளை ஒரு செக்கண்டில் செய்யக்கூடியது.


இந்த எலெக்ரொனிக் (System Unit) இயந்திரத்தை உடம்பு எனவும், அதனை இயக்கும் (Operating System) ஒபறேற்ரிங் சிஸ்ரம் எனும் புறோக்கிறாமை உயிர் எனவும் அழைப்பர். உயிர் புகுத்தப்பெறாவிடில் உடலான இயந்திரம் இயங்காது.


இந்த இயந்திரத்தில் உள்ள உறுப்புகளை Hard Ware “வன் பொருள்” எனவும் இதில் (Install) உள்ளூட்டல் செய்யப்பெற்ற Operating System த்தையும் Application software யும் Soft Ware “மென் பொருள்” எனவும் அழைப்பார்கள்.



இந்த எலெக்ரொனிக் இயந்திரத்திற்கு மனித மொழி தெரியாது, ஆனால் மின்சாரம் பாயும் போது ”on” “1″ என்பதையும் மிசாரம் இல்லாத பொழுது ”off” “0″ என்பதனை மட்டும் உணரக்கூடியது. இதனை ஆதாரமாக வைத்தே இதனை இயக்கும் Soft Ware என்னும் மென்பொருள் Operating System எழுதப் பெற்று Install செய்கின்றார்கள்.


அதன் பின்னரே மனித மொழியை கணனி புரிந்து செயல்படுகின்றது. இந்த Soft Ware எழுதுவதற்கென்றே பல கணனி மொழிகள் உருவாக்கப் பெற்றுள்ளன. (C++, Java, Pascal போன்றவை).

Sunday, August 26, 2012

கணணி அடிக்கடி Restart ஆனால் என்ன செய்வது?



உங்களது கணணி அடிக்கடி Restart ஆவதற்கும், Hang ஆவதற்கும் பல காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமாக நான்கு காரணங்கள் உள்ளன.

1. புதிதாக ஏதேனும் ஒரு வன்பொருளை உங்கள் கணணியில் நிறுவி இருந்தால் அது நன்றாக பொருத்தப்பட்டு உள்ளதா என்று பரிசோதிக்கவும். அதன் பின் அந்த வன்பொருளின் Settings Check பண்ணவும்.

2. RAM Slot-ல் இருந்து RAM-ஐ எடுத்து அதன் காப்பர் பாகத்தை மென்மையாக துடைக்கவும். அதை துடைக்க Pencil Eraser பயன்படுத்துவது சிறந்தது. இதனை பின்பு Mother Board-ல் இணைக்கும் போது கவனமாக இணைக்க வேண்டும்.

3. Mother Board-ல் Processor Heat Sink உடன் இணைந்திருக்கும் Cooling Fan இயங்குகிறதா என்று சரிபார்க்கவும். மேலும் அது Heat Sink உடன் ஒட்டி இருக்கும்படி அமைந்துள்ளதா என்று சரி பார்க்கவும்.

4. கடைசியாக SMPS(Switch Mode Power Supply) Fan செயல்படுகிறதா என்று பார்க்கவும்.

கணனியின் மத்திய செயற்பாட்டகம் – CENTRAL PROCESSING UNIT - CPU)ஓர் அறிமுகம்


கணனியின் மத்திய செயற்பாட்டகம் – "CENTRAL PROCESSING UNIT - CPU" அல்லது மையச்செயலகம்(என்பது ஓர் கணனியின் மூளை என்றே கூறலாம். கணனியில் செயற்படுத்தப்படும் மென்பொருட்களை விளங்கிக் கொள்ளக்கூடிய ஓர் இலத்திரனியல் சதனமே இதுவாகும். இது பல ஆயிரம், பல மில்லியன் திரான்சிஸ்டர்களின் (transistors) ஓர் ஒருங்கிணைந்த கூட்டாகும். வழங்கப்படும் தகவல்களை ஒருங்கமைத்து செயற்படுத்தி அவற்றுக்கான தீர்வுகளை கொடுப்பதில்... இவற்றின் பங்கு இன்றியமையாதன. அத்துடன் கணனியின் அதிகமான விடையங்களை செயற்படுத்தும் அல்லது தீர்மானிக்கும் அடமாகவும் இதுவே விளங்குகின்றது. இந்தப்பெயர் 1960 களில் இருந்து கணனித் தொழில்நுட்பத்தில் கையாளப்பட்டுவரும் ஒன்றாகும். ஆனால் இன்று உள்ள மையச்செயலகங்கள் பெருமளவிற்கு தமது வடிவம் மற்றும் செயற்றிறன் கட்டமைப்புக்களில் மாற்றங்களை உள்வாங்கி வளர்ச்சியடைந்து வந்துவிட்டன.

இருப்பினும் அதன் அடிப்படை கட்டமைப்புக்கள் இன்றும் பேணப்படுகின்றது. மத்திய செயற்பாட்டகங்கள் தகவல்களை தற்காலிக சேமிப்பகங்களில் இருந்து பெறுவது தொடக்கம் அவற்றினை இன்னோர் தகவலுடன் இணைத்து நோக்குதல் மற்றும் விடையங்களை தர்க்க ரீதியில் தரம் பிரித்தல் போன்ற செயல்களான கணனியின் மிக அடிப்படையான விடையங்களை செய்கின்றன. ஓர் மத்திய செயற்பாட்டகம் ALU, Registers, and the Control Store (ALU என்பது சிறிய செயற்பாடுகளை விளங்கிக் கொள்வதற்கான பகுதி
உதாரணமமாக NOT, Left Shift, Right Shift, Add, Subtract, AND, and OR என்பனவற்றை குறிப்பிடலாம) என மூன்று முக்கியமான உள்ளடக்கங்களை கொண்டிருக்கும் தகவல்களை பெற்றுக்கொள்ளல், அவற்றினை புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் (எண் முறைமைக்கு) மாற்றுதல் செயலாற்றுதல் இறுதியில் விடையங்களை திருப்பி பதிவு செய்தல் போன்ற நான்கு விடையங்களை ஒரு மத்திய செயற்பாட்டுத்தொகுதி ஓர் கணனியில் செய்கின்றது. ஆரம்பகாலங்களில் மிகவும் நுணுக்கமான மத்திய செய்ற்பாட்டகங்கள் 1970 களிலேயே வெளிவரத்தொடங்கின.

முதன்முதலில் the Intel 4004 மத்திய செயலகங்கள் வெளிவந்தன ஆனால் the Intel 8080 கள் வந்தவேளையிலேயே அவை பிரபல்யமடைந்தன. அதிகமான மென்பொருள்கள் ஓர் கணனியில் இயங்குவதற்கு தேவையான மத்திய செயற்பாட்டகங்களின் வேகங்கள் பல மென்பொருள் அமைப்பாளர்களால் குறிப்பிடப்படுவதுண்டு. ஏனெனில் கணனியின் செயற்படும் வேகத்தினை தீர்மானிக்கும் பல காரணிகளில் இம் மத்திய செயலகங்கள் முக்கிய பங்கு கொண்டவை. இவற்றி வேகங்கள் குறையும்போது கணனி மெதுவாக செயற்பட ஆரம்பிக்கின்றது.

பொதுவாக கணனிகளை அவற்றின் மத்திய செயற்பாட்டகங்களின் வேகங்களை கொண்டே இனங்காண்பதுண்டு. Intel and Advanced Micro Devices (AMD) இன்றைய கணனிச் சந்தையில் விற்பனையில் இருக்கும் இரண்டு வகையான மத்தியசெயற்பாட்டகங்கள எனலாம். இவை இரண்டும் ஒவ்வோர் வகையில் பிரசித்தி பெற்றவை, அதனை அடுத்து ஓர் கட்டுரையில் விரிவாக நோக்கலாம். தற்காலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட உள்ளீட்டு மையங்களை உடைய மிகவும் சிறிய மத்திய செயற்பாட்டகங்கள்; பாவனையில் வரத்தொடங்கிவிட்டன. எதிர்காலத்தில் இவற்றின் வளர்ச்சிகள் மிகத்துரிதமாக நடைபெறலாம்.

விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்டம் உள்ள கணணியில் இயங்கும் புரோகிராம் ஒன்று சரியாக இயங்காமல் முடங்குகிறதா?அதற்கான திர்வு இதோ.




விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்டம் உள்ள கணணியில் இயங்கும் புரோகிராம் ஒன்று சரியாக இயங்காமல் முடங்குகிறதா?

இதற்கான தீர்வு தரும் வழியினை விண்டோஸ் 7 ஓபரேட்டிங் சிஸ்டம் தன்னுள்ளே கொண்டுள்ளது. ஸ்டார்ட் அழுத்திக் கிடைக்கும் சர்ச் பாக்ஸில் Troubleshoot என டைப் செய்து என்டர் அழுத்தவும்.

அதன் பின்னர் கிடைக்கும் பட்டியலில் Troubleshooting என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் உள்ள Troubleshooter என்னும் பிரிவினை இயக்கும். இதில் பலவகையான பிரச்னைகள் குறித்த பட்டியல் கிடைக்கும்.

இங்கு உங்கள் பிரச்னையே பட்டியலிடப்பட்டிருக்கலாம் அல்லது சார்ந்த பிரிவினைத் தேர்ந்தெடுத்து மேலும் உள்ளாகச் சென்று உங்களுடைய பிரச்னை குறிக்கப்பட்டிருப்பதனைக் காணலாம்.

சில புரோகிராம்கள் தரும் பிரச்னை எனில் அவை இதற்கு முந்தைய ஓபரேட்டிங் சிஸ்டத்தில் நன்றாக இயங்கி தற்போது சரியாக இயங்கவில்லை என்றால் இங்கு கிடைக்கும் Program Compatibility என்ற விண்டோவில் அதற்கான தீர்வினைப் பெறலாம்.

இந்த விண்டோ சென்றவுடன் நம் கணணியில் நிறுவியுள்ள அனைத்து புரோகிராம்களின் பட்டியல் காட்டப்பட்டு எந்த புரோகிராமில் பிரச்னை உள்ளது என நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பின்னர் Troubleshoot program என்ற பிரிவில் அந்த புரோகிராமில் ஏற்படக்கூடிய அனைத்து பிரச்னைகளும் பட்டியலிடப்படும். நம் பிரச்னையைத் தேர்ந்தெடுத்தால் தீர்வு காட்டப்படும்.

இதற்கு முந்தைய ஓபரேட்டிங் சிஸ்டங்களிலும் இந்த வசதி இருந்தாலும் பெரும்பாலும் “This device is working properly” என்ற விடையே கிடைத்து வந்தது. ஆனாலும் பிரச்னை தீர்க்கப்படவில்லை. ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இந்த வசதி நன்றாகவே இயங்குகிறது.

Friday, August 24, 2012

"COMPUTER CRASH" ஏற்படுவதற்கான காரணங்கள்


சில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.
சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
ஹார்ட்வேர் பிரச்னை
கம்ப்யூட்டரில் பல பாகங்கள்

sorry

இன்று முதல் இவ் வலைத்தளம் கணனி தொடர்பான தகவல்களை தமிழ் மொழி முலம் முழுமையாக அறியத்தரும்..............கணனி தொடர்பான உங்களது கேள்விகளையும் இங்கே பகிர முடியும் நன்றி.