Sunday, September 2, 2012

கணனி என்றால் என்ன...? What is a Computer ...?

கணனி என்பது பல எலொக்ரொனிக் இளைகளினால் ஆன transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால் பல உறப்புகளை ஒன்றினைத்து உருவாக்கப் பெற்ற ஓர் எலெக்ரொனிக் இயந்திரம்.

ஒபறேற்ரிங் சிஸ்ரம் என்னும் புறோகிறாம் மூலம் இயங்கச் செய்து, அதன் மூலம் ஒரு வேலையை துல்லியமாகவும், வேகமாகவும், தன்னிச்சையாக செயல்பட்டு செய்விக்க கூடியதாக உருவாக்கப் பெற்ற ஒரு கருவியே கணனி என அழைக்கப்பெறுகின்றது.


கணனியின் முழுச் செயற்பாட்டிற்கும் அதில் உட்புகுத்தப் பெற்றுள்ள ஒபறேற்ரிங் சிஸ்ரமே அடித்தளமாகவும், உந்துசக்தியாகவும் அமைந்து, எல்லா உறுப்புகளையும் ஒன்றாக இணைத்து இயக்குகின்றது.


அது Application Software ன் பாவனையின் போது அதனுடன் இணைந்து அது இயங்கும் மேடையாக அமைந்து தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து, அவ்வப்போது அவற்றில் முன்கூட்டியே பதியப்பெற்றுள்ள உபதேசங்களிற்கு அமைய கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் CPU க்கு வழங்குவது ஒபறேற்ரிங் சிஸ்ரமே.



கணினிகளின் வகைகள்:

எல்லோருடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்திசெய்யும் வகையில் பலவித அளவுகளில் கணனிகள் உருவாக்கப்பெற்று, அவைகள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப் பெற்றுள்ளன.


அவையாவன:

1. Personal -Computers:
 
Desktop – Pc
Tower – Pc
Laptop – Pc
Hand held – Pc
Network – Pc
PC – Personal Computer
– பிரத்தியேக கணனி என பொருள்படும்.

2. Mini – Computers:

இது ஒரு டிபாட்மென்ரில் பாவிப்பது. இதன் மூலம் நூற்றுக் கணக்கான கணனிகளை ஒன்றிணைது ஒன்றிற் கொன்று தொடர்புடன் ஒரே நேரத்தில் இயக்கமுடியும்.

3. Mainfram – Computers:

பெரிய நிறுவனங்களில் பாவிப்பது. இதன் மூலம் பல ஆயிரம் கணனிகளை ஒன்றிணைது ஒன்றிற் கொன்று தொடர்புடன் ஒரே நேரத்தில் இயக்கமுடியும்.


4. Super – Computers:

நாசா போன்ற பெரிய ஆராச்சி நிலையங்களில் பாவிப்பது. வேகத்தில் கூடியதும், மில்லியன் கணக்கான வேலைகளை ஒரு செக்கண்டில் செய்யக்கூடியது.


இந்த எலெக்ரொனிக் (System Unit) இயந்திரத்தை உடம்பு எனவும், அதனை இயக்கும் (Operating System) ஒபறேற்ரிங் சிஸ்ரம் எனும் புறோக்கிறாமை உயிர் எனவும் அழைப்பர். உயிர் புகுத்தப்பெறாவிடில் உடலான இயந்திரம் இயங்காது.


இந்த இயந்திரத்தில் உள்ள உறுப்புகளை Hard Ware “வன் பொருள்” எனவும் இதில் (Install) உள்ளூட்டல் செய்யப்பெற்ற Operating System த்தையும் Application software யும் Soft Ware “மென் பொருள்” எனவும் அழைப்பார்கள்.



இந்த எலெக்ரொனிக் இயந்திரத்திற்கு மனித மொழி தெரியாது, ஆனால் மின்சாரம் பாயும் போது ”on” “1″ என்பதையும் மிசாரம் இல்லாத பொழுது ”off” “0″ என்பதனை மட்டும் உணரக்கூடியது. இதனை ஆதாரமாக வைத்தே இதனை இயக்கும் Soft Ware என்னும் மென்பொருள் Operating System எழுதப் பெற்று Install செய்கின்றார்கள்.


அதன் பின்னரே மனித மொழியை கணனி புரிந்து செயல்படுகின்றது. இந்த Soft Ware எழுதுவதற்கென்றே பல கணனி மொழிகள் உருவாக்கப் பெற்றுள்ளன. (C++, Java, Pascal போன்றவை).

No comments:

Post a Comment